Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

eMudhra பங்குகள் 20% வீழ்ச்சி

eMudhra பங்குகள் 20% வீழ்ச்சி

இணையதள பாதுகாப்பை உறுதி செய்யும் டிஜிட்டல் சான்றிதழ்களின் ரகசியக் குறியீடுகளில் கசிவு உள்ளதாக சைபர் பாதுகாப்பு அமைப்பான 'செர்ட்-இன்' எச்சரித்தது.

பகிரவும் WhatsApp Facebook

டிஜிட்டல் பாதுகாப்பு சான்றிதழ்களை வழங்கும் 'இ-முத்ரா' நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு குறைபாடு குறித்து தீவிரமாக விசாரிக்க, மத்திய அரசு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது. இதன் எதிரொலியாக, பங்குச் சந்தையில் அந்த நிறுவனத்தின் பங்குகள் 20 சதவீதம் சரிந்து, 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன.

தேசிய பங்குச் சந்தையில் வியாழக்கிழமை இ-முத்ரா நிறுவனப் பங்கின் விலை 19.91 சதவீதம் சரிந்து ரூ.346-ஆகவும், மும்பை பங்குச் சந்தையில் 19.63 சதவீதம் குறைந்து ரூ.346.85-ஆகவும் சரிந்தது. இணையதள பாதுகாப்பை உறுதி செய்யும் டிஜிட்டல் சான்றிதழ்களின் ரகசியக் குறியீடுகளில் கசிவு உள்ளதாக சைபர் பாதுகாப்பு அமைப்பான 'செர்ட்-இன்' எச்சரித்தது. இதனால் இணைய மோசடிகள் நடக்க வாய்ப்புள்ளதால், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இக்குழுவை அமைத்துள்ளது.

இதுகுறித்து இ-முத்ரா நிறுவனம் தரப்பில், "பலவீனமான ரகசியக் குறியீடுகள் உருவாக்கப்பட்டாலும், அவை ஒருபோதும் வணிகப் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. இதனால் இந்திய வாடிக்கையாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. எங்களது டிஜிட்டல் கையொப்ப வர்த்தகம் வழக்கம்போல தடையின்றி இயங்குகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
ஜெர்மனி உடனான வர்த்தகம்: 310 பில்லியன் யூரோவாக உயர்த்த இலக்கு
அடுத்த செய்தி
Jio Platforms - ரூ.3.73 லட்சம் கோடியை தாண்டிய விண்ணப்ப மதிப்பு

தொடர்புடைய செய்திகள்